யாழில் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட இளம் குடும்பப் பெண்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் அறுத்துக் கொண்டுள்ளார்.
இன்றையதினம்(15) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனால் குறித்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தனது கழுத்தினை தானே வெட்டிக் கொண்ட பெண் அராலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், மானிப்பாய் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
