நடுவானில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்: 28 பேர் தப்பியோட்டம் - உலக செய்திகள்
நடுவானில் பெண் ஒருவர் தனக்கு பிரசவவலி வந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் 28 பேர் விமானத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டிலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விமானம் ஸ்பெயின் பகுதியில் பறந்துகொண்டிருந்தது.
இதன்போது, திடீரென பெண் ஒருவர் தனக்கு பிரசவவலி வந்துவிட்டதாக கூறவே, விமானம் அவசரமாக பார்சிலோனா நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்கு விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்த 28 பேர் தப்பியோடிய நிலையில் 14 பேர் மட்டுமே பொலிஸாரிடம் சிக்கினார்கள்.
இந்நிலையில், பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்றும், ஆனால், அவருக்கு பிரசவ நேரம் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
28 பேர் தப்புவதற்காக அந்தப் பெண் தனக்கு பிரசவவலி வந்ததுபோல நடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான உலக செய்திகளின் தொகுப்பு,

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
