வீடு திரும்பிய மரணித்த பெண்: இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய் என்ற பெண்ணே உயிரோடு திரும்பி வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த பெண் கடந்த 2023 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.
4 பேர் கைது
இந்தநிலையில், லொறி விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த காணொளி ஒன்று வெளியானது.
இதன்போது, உயிரிழந்த பெண்ணின் பெண் குத்தியிருந்த பச்சையை பார்த்த அவரது குடும்பத்தினர் இது லலிதா பாய் என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.
பின்னர், கொலை செய்யப்பட்டதாக கூறி அந்த பெண்ணை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
இதனையடுத்து, குறித்த கொலை வழக்கு தொடர்பி்ல் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிரோடு வந்த பெண்
இந்தநிலையில் லலிதா பாய் மீண்டும் உயிரோடு திரும்பி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து லலிதா பாயிடம் விசாரிக்கும் போது, "ஷாருக் என்ற நபர் தன்னை ரூ.5 லட்சத்திற்கு ஒருவரிடம் விற்பனை செய்தார்.
பின்னர், என்னை ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவிற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், என்னிடம் தொலைபேசி இல்லாததால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது, நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
