காலியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்
காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்தப் பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான உறவினர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam