மட்டக்களப்பில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண் : நீதிபதி இன்று வழங்கிய உத்தரவு(Video)
கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு நகர்ப் பகுதியான அரசடியில் வைத்து கொடூரமாக கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணின் கொலை சம்பவத்தில் கொலையாளிகளை கையும் களவுமாகப் பிடித்த நபர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இன்று மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவரின் கணவரிடம் பொலிஸார் சில அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொடூர படுகொலை சம்பந்தமாக ஊடகங்களுக்குப் படுகொலை செய்யப்பட்டவரின் கணவர் தெரிவிக்கையில்,
தனது மனைவியின் கொலைக்கான நீதியினை கடவுளும் நீதிமன்றமும் வழங்கும் என நான் நம்புகின்றேன். எனது மனைவியின் இழப்பை என்னால் எவ்வாறு விவரிப்பது என்று முடியாமலிருக்கின்றது.
இன்று 16 நாட்கள் கடந்தும் நாங்கள் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றோம். இதற்கான நிதியினை நீதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும் இதே போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் இனி ஒருபோதும் இடம்பெற இடமளிக்கக்கூடாது.
ஊடகங்களும் இந்த செய்தியினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு உதவி செய்து
கொண்டிருக்கின்றீர்கள் எனது மனைவி உயிரோடு வரப்போவதில்லை. ஆகவே எனது மனைவியின்
கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
