போதைப் பழக்கம் காரணமாக 68 பொலிஸார் இடைநிறுத்தம்
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப் பழக்கம் காரணமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நிலையமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிதாக பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 20 வீதமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
போதைப் பழக்கம்
அத்துடன் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் 68 பொலிஸார் போதைப் பழக்கம் காரணமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக மதகுருமார்கள், கல்வி கற்றவர்கள் கூட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் போதைப் பழக்கம் கடுமையாக பரவிக் கொண்டிருக்கின்றது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 72 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் காரணமாகவே தண்டிக்கப்பட்டு, தடுத்து வைக்க்பபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
