பிரான்சில் பெண் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்பு
பிரான்சில் 77 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Herault பகுதியில் உள்ள Agde-வில் இருக்கும் ரிசார் ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், தலையும், சடலமும் தனியாக காணப்பட்ட நிலையில்,பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உள்ளே வெளி ஆட்கள் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான பெயர், விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam