கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த கைது இடம் பெற்றுள்ளது.
கைது
இந்தநிலையில், இன்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 20 கிலோ கேரளா கஞ்சாவினை சிறப்பு அதிரடி படையினர் மற்றும் தருமபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றி உள்ளனர்.
சம்பவத்தில் வீட்டு உரிமையாளரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் நாளை (26) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
