யாழில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது
யாழில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இன்று (10) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 27 கால் போத்தல்கள் சாராய போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கால் போத்தல் சாராயம் ஒன்றினை ரூபா ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)