வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் கைது
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் உக்கிளாங்குளம் - கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கஞ்சாப் போதை பொருளை கைப்பற்றிய பொலிஸார் இது தொடர்பில் குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசாரணைகளின் பின் குறித்த
பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
