தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 2.75 கிலோகிராம் தங்க நகைகளை கடத்த முற்பட்ட பெண்ணொருவர் விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (10.02.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சுத்தம் செய்யும் வெயாங்கொடை - மிரிதியலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு மற்றுமொரு பெண்ணினால் நகைகள் மற்றும் ஜெல் தொகை அடங்கிய பொதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்தன் பின்னர் பணம் தருவதாக கூறியமையால் தான் இந்த பொதியை பெற்று வந்ததாக கைது செய்யப்பட்ட பெண் சுங்கம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 5 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri