கணவனை மீட்க பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Aanadhi Jun 24, 2022 01:32 AM GMT
Report

கஞ்சா விவகாரத்தில் வழக்குத் தொடுக்கப்படாமல் கணவனை மீட்பதற்காக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அப்பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரொருவரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவல் உத்தரவு பெற்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசிய பெண்

இந்நிலையில் சந்தேக நபரின் மனைவி அவிசாவளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் தனது கணவனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டாம் என்றும் அதற்காக இரண்டரை லட்சம் ரூபா லஞ்சம் வழங்குவதாகவும் பேரம் பேசியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு இணங்க இலஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து குறித்த பெண் லஞ்சம் வழங்கும் ​போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலஞ்ச, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.

கணவனை மீட்க பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண் கைது | Woman Arrested For Trying To Bribe

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US