வவுனியாவில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது!
வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(27) வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள வயோதிப பெண்ணை மயக்கமடையச்செய்து 21 வயது பெண் ஒருவர் அந்த வீட்டில் இருந்த ஏழரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வயோதிப பெண், சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச்
சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 04 அரைப்
பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
