பிரித்தானியாவில் வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு கைது செய்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து சென்று அந்த நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் ஆரம்பம்
நேற்று (30), குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு அதிகாரிகள், இந்தப் பண மோசடிக்கு உதவியதற்காக டிக்வெல்லவின் வெஹெல்ல பகுதியில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வெஹெல்லவின் உருகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.