சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யுவதியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோலின் அராவியோ டி சில்வா என்ற 23 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த இந்த யுவதி, சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த யுவதியை பிரேசிலுக்கு நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த இவர் விசா காலாவதியானதால் இலங்கை வந்துள்ளார். சர்வதேச பொலிஸாருடன் இலங்கைக்கு தொடர்பு இருப்பது தெரியாமலேயே அவர் இலங்கைக்குள் நுழைய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-468 இல் குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
