ஏறாவூரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவர் கைது
ஏறாவூர் (Eravur) - மீராங்கேணி பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரி ஒருவரை கைது செய்யும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் - மீராங்கேணி பிரதேசத்தில்11230 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட இருவர் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றி வளைப்பு
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிஸார் போதைபொருள் வியாபாரி ஒருவரை 11230 மில்லிகிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் தமது கடமையை செய்யவிடாது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய பெண் ஒருவரையும் 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் போதைபொருள் வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்! தகவல் கொடுத்த முக்கிய அதிகாரி: இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆவணம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |