இலங்கை கிரிக்கெட் சபையினால் தெரிவான கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவர்
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சபை கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட மகளிர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நடுவராக எம்மா க்ளோரியா கடமையாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்
மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்களுள் ஒருவராவார்.
இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மண்ணை பெருமையடையச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
