உயர்தர மாணவனை தகாத முறைக்குட்படுத்திய பெண்!.. பொலிஸில் முறைப்பாடு
கல்வி கற்கும் இளைஞன் ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக 46 வயதுப் பெண்ணொருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் களுத்துறை - வரக்காகொட பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், தனது அயல்வீட்டில் வசிக்கும், இரண்டாவது தடவையாக க.பொ.த உயர்தரப்பரீட்சை எடுப்பதற்குத் தயாரான இளைஞன் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
உரிய நடவடிக்கை
குறித்த பெண், அந்த இளைஞனுக்கு ஐபோன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்துமாறு இளைஞனின் தாயார் தனது மகனை வற்புறுத்திய நிலையில், இளைஞன், தாயார் மற்றும் சகோதரிகளை விட்டு அந்த பெண்ணுடனேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தருமாறு இளைஞனின் தாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam