மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தரையிறங்கும் தொழிலாளர்கள்
இலங்கையில் இருந்து குறைந்தது 1,000 தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தொழில் நிமித்தம் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிய வருகையில், "குறிப்பாக, தோடம்பழச்செய்கை துறையிலேயே அவர்கள் பணிகளுக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
அதே நேரம், கடந்த வாரம் 122 இலங்கைத் தொழிலாளர்கள் தமது நாட்டில் தரையிறங்கியுள்ளனர்.
ஹமாஸ் படுகொலை
இந்த வாரம் 377 பேரும் அடுத்த வாரம் மேலும் 258 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வரவுள்ளனர்.
அக்டோபர் 7 ஹமாஸ் படுகொலைக்குப் பிறகு, விவசாயத் துறையில் பின்னடைவுகள் ஏற்பட்டன. எனினும் அந்த இடைவெளிகளைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் ஒரு படியாகவே வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இஸ்ரேல் அரசின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதில் இலங்கையிடம் இருந்து உடனடி பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |