ராஜபக்சக்கள் தவிர்த்த சுதந்திர தின நிகழ்வு
கொழும்பு - காலிமுகத்திடலில் நேற்று (04.02.2023) நடைபெற்ற 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்சவை தவிர வேறு எவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் அவ்விருவரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரது பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
ராஜபக்சக்கள் எவரும் பங்கேற்காத நிகழ்வு
அதேவேளை, நேற்றைய நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட போதிலும், நாமல் ராஜபக்ச எம்.பி. மற்றும் இராஜங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை.
எனவே இம்முறை சுதந்திர தின நிகழ்வு சமல் ராஜபக்சவை தவிர ஏனைய ராஜபக்சக்கள் எவரும் பங்கேற்காத நிகழ்வாகவே அமைந்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
