மரண தண்டனைகளில் முதலிடம் பெற்றுள்ள வெளிநாடு! 300ற்கும் மேற்பட்ட தண்டனைகள் பதிவு
ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கையில் சவுதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு குறைந்தது 347 பேருக்கு அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இது 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 345 ஆக இருந்தது என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரசாரக் குழுவான ரெப்ரைவ் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற தடை
அண்மையில் தூக்கிலிடப்பட்ட கைதிகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் அடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு பத்திரிகையாளரும், எதிர்ப்பு தொடர்பான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் நேரத்தில் சிறுவர்களாக இருந்த இரண்டு இளைஞர்களும் அடங்குவர்.
எனினும் மரணதண்டனைகள் அதிகரிப்பது குறித்து பிபிசியின் கருத்துக்கான கேள்விக்கு சவுதி அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை முடிவுக்குக் கொண்டு வந்ததிலிருந்து போதைப்பொருள் தொடர்பான மரணதண்டனைகள் அதிகரித்துள்ளன.
மரணதண்டனைகள்
இதேவேளை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, அதிக அளவிலான மரணதண்டனைகள் ஒரு பெரிய கவலையாக உள்ளன என்றும் சீனாவும் ஈரானும் மட்டுமே அதிகமான மக்களுக்கு மரணத்தண்டனைகளை வழங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறையை சவுதி அதிகாரிகள் வெளியிடுவதில்லை, இருப்பினும் அது தலை துண்டிக்கப்படுதல் அல்லது துப்பாக்கிச் சூட்டின் மூலமே அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam