ஜனாதிபதி எடுத்த அதிரடி தீர்மானம்! பதவி விலக்கிய சில மணி நேரத்தில் மீண்டும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமனம்
பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ எரிவாயு நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, லிட்ரோ நிறுவனத்தின் தலைவரை பதவி விலக்கும் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
அத்துடன், லிட்ரோ நிறுவன தலைவராக ரேனுக பெரேராவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, தெசார ஜயசிங்க மீணடும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கெரவலபிட்டிய − முத்துராஜவெல மாபிம லிட்ரோ எரிவாயு நிறுவன வளாகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி லிட்ரோ தலைவர் தெசார ஜயசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இதன்போது, பதவிநீக்கம் குறித்து தனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தெசார ஜயசிங்கவை மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதோடு, புதிய தலைவர் நியமனத்தை இரத்துச் செய்வதற்கான கடிதம் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
