இன்னும் 7 முதல் 8 மாதங்களில் அரசாங்கம் விழுந்து விடும்! வசந்த சமரசிங்க
நாட்டின் தற்போதைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கம் இன்னும் 7 முதல் 8 மாதங்கள் வரையே தாக்குப் பிடிக்கும். அதன் பின்னர் அரசாங்கம் விழுந்து விடும்.
இதன் காரணமாக அதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
கொரோனா தொற்று நோயால் மக்கள் நாளுக்கு நாள் பலியாகி வரும் நிலைமையில், அரசாங்கம் தனது தோல்வியை மறைக்க தேர்தல் முடிவுகளை காண்பிக்க மேற்கொள்ளும் முயற்சியை எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.