ஐக்கிய அரபு அமீரக லொட்டரியில் மிகப்பெரிய பரிசுத்தொகையை வென்ற தமிழர்
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற “எமிரேட்ஸ் டிரோ” சீட்டிழுப்பில் வரலாற்றில் மிகப்பெறிய தனிநபர் வெற்றி பரிசை தனதாக்கியுள்ளார்.
சென்னையில் வசிக்கும் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவரே, கடந்த மார்ச் 16 அன்று நடந்த இந்த போட்டியில் ஏழு எண்களையும் பொருத்தி 100 மில்லியன் திர்ஹம்ஸ் (27 மில்லியன் டொலர் ) பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
இந்த பரிசுத்தொகையானது இலங்கை மதிப்பில், எட்டு பில்லியனுக்கும் அதிக தொகை என கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தொகை
ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலில் 1998 இல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வேலை செய்து மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், வெற்றி பெற்ற தருணத்தை விவரித்த அவர், இந்த வெற்றியால் கிடைத்த வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய தொகை 70% மகிழ்ச்சியையும் 30% பயத்தையும் கொண்டு வந்தது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீராம், “இது எனது வெற்றி மட்டுமல்ல. இது எனது குடும்பம், எனது குழந்தைகள் மற்றும் பிறருக்கு நம்பிக்கை. ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறார், இப்போது என்னால் முடியும்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்ற எதிர்காலத் திட்டங்களை அவர் விவரிக்கவில்லை என்றாலும், வெற்றிகளின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாகவும், புதிதாகக் கிடைத்த செல்வம் இருந்தபோதிலும் நிலையாக இருக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

