கிழக்கு பல்கலை மாணவிக்கு சக மாணவனால் நேர்ந்த துயரம்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சக மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை(ராக்கிங்) செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரையே நேற்று(23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்பபடுத்த
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்;தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்பபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணையையும் ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
