மன்னாரை பாதிக்கும் காற்றாலை மின் திட்டம்! பொதுமக்கள் அதிருப்தி
மன்னார் தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இப்பகுதியில் தேவையில்லாத செயற்திட்டம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் அடிகளார் குறிப்பிட்டடுள்ளார்.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், மக்களின் வாழ்விடங்களை பாதிக்காத வகையில் பெருநிலப்பரப்புகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும், மார்க்கஸ் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனிய மணல் அகழ்வு
அத்தோடு, கனிய மணல் அகழ்வை நாங்கள் முற்று முழுதாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும்இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள தென்பகுதியில் இருந்து சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெறுகின்ற பகுதிகளுக்கு கள விஜயத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொண்டனர்.
இதன் போது சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் மன்னார் தீவு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடப்பட்ட விடையங்கள் குறித்து ன்னார் பிரஜைகள் குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
