“விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு” புதிய திகதி அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே 6ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சஷி வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையானார்.
ஏற்கனவே இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
