இலங்கை இராணுவத்துக்கு அரசு செய்யும் பாரபட்சம்:விமலின் குற்றச்சாட்டு
இலங்கை இராணுவத்தை விட்டு விலகிச் செல்லும் சிப்பாய்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புது வருடத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் ஓரவஞ்சனை
இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் வரப்பிரசாதங்கள் நாளுக்கு நாள் குறைக்கப்படுகிறது.அத்தோடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணங்களுக்காக விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் சம்பளம் வெட்டப்படுகிறது.
2030 ஆம் ஆண்டளவில் 60 ஆயிரமாக இராணுவத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதனால் இராணுவ சிப்பாய்கள் வாழ்க்கை நடத்த போதுமான வருமானம் இல்லாமல் விட்டுச் செல்கின்றனர்.

இதில் இராணுவத்தின் உயரதிகாரிளும் விலகிச் செல்கின்றனர்.அது மட்டுமல்ல பங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை கொண்டு வருகின்றனர்.
ஆனால் அவ்வாறான சட்டங்களில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது என்வோ ஜனநாயக அரசியலில் ஈடுபடும் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகளை கட்டுப்பத்துவதை முன்னெடுத்து செல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri