மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கலான சூழல்:வசந்த முதலிகே எச்சரிக்கை
அரசாங்கம் பின்பற்றும் IMF கொள்கை மற்றும் இந்திய சார்பு பொருளாதார முன்னெடுப்புக்கள் போன்றவற்றால் நாட்டு மக்கள் எதிர்நோக்க போகும் கஷ்டங்கள் குறித்து பொது மக்களுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் போராட்ட இயக்கம் நேற்று (01.01.2026) கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு முன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.
அச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளதாவது.
எதிர்காலத்தில் முகம் கொடுக்கப் போகும் சவால்கள்
2025 ஆம் ஆண்டு மக்களுக்கு ஒரு சவாலான வருடமாக இருந்தது.ஆனால் புத்தாண்டு மக்களுக்கு மேலும் ஒரு சவாலான ஆண்டாக அமையும்.
அரசாங்கத்தின் புதிய தாராளமயமான IMF க்கு சாதகமான பொருளாதாரக் கொள்கையால், முழு நாடும் ஒரு பெரிய கடன் பொறியில் சிக்கியுள்ளது. இந்த நாட்டின் தொழிலாள வர்க்கம் அந்தக் கடனை செலுத்த வேண்டியிருக்கும்.
மறுபுறம், குழந்தைகளின் கல்வி உரிமையை குறைக்கும் மசோதாக்கள் வரவுள்ளன. எதிர்காலத்தில், மேலும் மேலும் தரமற்ற மருந்துகள் நமது வைத்தியசாலைகளுக்கு வரும். இந்திய நிறுவனங்கள் நமது விவசாயிகளின் நிலங்களை கொள்ளையடிக்க வருகின்றனர்.

இந்திய டோலர் படகுகள் மீன்பிடி வளங்களை கொள்ளையடிப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மக்கள் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்பார்த்து ஒரு புதிய அரசாங்கத்தைக் கொண்டு வரவில்லை.
ஆனால் இந்த அரசாங்கமும் பழைய ரணில் ராஜபக்ஷ குடும்பத்தின் அதே கொள்ளையடிக்கும் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துகிறது.அந்த கொள்ளையடிக்கும் கொள்கையை எதிர்த்து மக்கள் ஒன்று கூடி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri