ஒற்றையாட்சிக்கு பேராபத்து! பதறும் விமல்
மாகாண சபை முறையிலுள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது என்றும் அதற்கு இடமளித்தால் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
ஒற்றையாட்சியை காக்க முடியாது
ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டில் இருந்த ஏழு ஜனாதிபதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது. மாகாணத்துக்கு இறைமையைப் பகிரவே இங்கு முயற்சி இடம்பெறுகின்றது.
ஒத்திசைவு பட்டியல் நீக்கப்பட்டு, முழுமையாக அதிகாரங்களைப் பகிர்ந்தால் ஒற்றையாட்சியைக் காக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
