இந்தியாவுக்காக தரவு பாதுகாப்பு சட்டம் நீக்கப்படுமா! விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்
இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கு இலங்கையின் தரவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால் ஒரு மாதத்தில் திருச்ச சட்டமூலம் கொண்டுவரப்படும் என சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நேற்று(03.08.2025) நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் இது தொடர்பில் தெரிந்து கொள்ளவும்.
தரவு பாதுகாப்பு சட்டம்
எமது எதிர்க் கட்சிகளும் குறித்த சட்டமூலத்திற்கு எவ்வித கோட்பாடுகளும் இல்லாமல் கையை உயர்த்தக் கூடும். நாங்கள் இப்போதே எச்சரிக்கை விடுக்கிறோம்.

இந்தியாவுக்காக திருத்தப்படும் இலங்கையின் தரவு பாதுகாப்பு சட்டத்தை முடிந்தால் எதிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு அரசாங்கத்திலுள்ள ஒருவருக்காவது முதுகெலும்பு இருந்தால் டிஜிட்டல் அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்.
இலங்கையில் தரவு பாதுகாப்பு சட்டம், குறிப்பாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம்
2022ஆம் ஆண்டு 9ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.

இந்த சட்டம் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri