பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை.. எச்சரிக்கும் விமல்
2028 ஆம் ஆண்டு கடனை செலுத்த முடியாமல் இரண்டாவது தடமையாகவும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டு கையிருப்பு
தொடர்ந்து பேசிய அவர், 2028 ஆம் ஆண்டில் பிணை முறிகளில் அதிக வட்டியில் பெற்றுக் கொண்ட கடனும் அதற்கான வட்டியும் செலுத்த வேண்டும்.அந்த கடன்களை செலுத்துவதற்காக 2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு 15 பில்லியன் டொலர் இருக்க வேண்டும் என IMF தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது கையிருப்பு 6.5 பில்லியன் டொலர் தான் இருந்தது.இன்றும் அதே அளவு தான் இருக்கிறது.ஆனால் அதை விட குறைவான அளவே இருக்கிறது.
2027 இல் அந்த அளவை நோக்கி செல்ல முடியுமா?IMF குறிப்பிட்ட அளவு இருக்காவிட்டால்,கடனையும் வட்டியையும் செலுத்தும் போது அத்தியாவசிய தேவையான கேஸ்,எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான டொலர் இருக்காது.
அப்போது மீண்டும் பொருளாதார நெருக்கடியா?முக்கிய பிரச்சினை இவ்வாறு இருக்கையில் எந்த கதைகளையும் கதைத்து பயனில்லை.வெளிநாட்டு கையிருப்பின் வீதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது என்றார்.