இலங்கையின் இறக்குமதிகள் ஏற்றுமதி வருமானத்தை விட அதிகரிப்பு: புபுது ஜாகொட குற்றச்சாட்டு
இலங்கையின் இறக்குமதிகள் ஏற்றுமதி வருமானத்தைக்காட்டிலும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சென்மதி நிலுவை பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி ஓட்டம்
இந்த நிலையில், அந்நிய செலாவணி ஓட்டங்களில் நிலைத்தன்மை இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இறக்குமதிகளுக்கான செலவு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி வருமானம்
எனினும் ஏற்றுமதி வருமானம், 7.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என்றும், நிதி அமைச்சக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan