விலங்குகளுக்கு அதிக நிதி: அரசாங்கத்தை விமர்சிக்கும் மருத்துவக்கூட்டணி
நாட்டின் மருத்துவ நிபுணர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2026 வரவுசெலவுத்திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதே வேளையில் விலங்கு நலனுக்காக கணிசமான நிதியை அரசாங்கம் ஒதுக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக நிதி
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், நாய்கள் உட்பட விலங்குகளின் நலனுக்காக அதிக அளவு மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இளம் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களைத் தக்கவைத்துக் கொள்ளவோ ஊக்குவிக்கவோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற மருத்துவமனைகள் முதல் முதன்மை பராமரிப்பு மையங்கள் வரை ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் 24 மணி நேரமும் அயராது உழைத்து, இலங்கையின் ஆரம்ப சுகாதார குறிகாட்டிகளை சர்வதேச அளவில் பராமரிக்கின்றனர் எனினும் இந்த முறை, அவர்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கது என்றும் ம சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.