முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரம்.. அரசாங்கத்தை கடுமையாக சாடும் விமல் வீரவன்ச

Anura Kumara Dissanayaka Wimal Weerawansa National People's Power - NPP NPP Government
By Rakesh Sep 14, 2025 02:31 AM GMT
Report

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, "முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன அடிப்படையற்ற காரணிகளைக் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்

நிஷாந்த உலுகேதென்ன கைது.. 

நாட்டில் அமைதியை நிலைநிறுத்திய படைத்தளபதிகள் இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் மகா சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் இங்கு வருகை தந்தோம்.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரம்.. அரசாங்கத்தை கடுமையாக சாடும் விமல் வீரவன்ச | Wimal Weerawansa Criticized Anura Government

அது தொடர்பில் பேசுபவர்களை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் அரசு முயற்சிக்கின்றமை தொடர்பிலும் மகா சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். அரசு அபிவிருத்திகளையோ சமூக மேம்பாட்டையோ செய்யவில்லை.

சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடன் சுமை முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

நிஷாந்த உலுகேதென்ன தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார். அதில் அவர் 'புலி' என்ற வார்த்தையை உபயோகித்தமைக்காகவே ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய முயற்சிக்கின்றனர். புலி என்பது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும்.

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடுவேன் - எழுந்துள்ள புதிய சர்ச்சை

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடுவேன் - எழுந்துள்ள புதிய சர்ச்சை

அரசியல் பழிவாங்கல் 

மாறாக அது தமிழ்ச் சமூகத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ விமர்சிக்கும் சொற்பிரயோகம் அல்ல. இவ்வாறு அடிப்படையற்ற காரணிகளைக் கொண்டு முன்னாள் அரசியல்வாதிகளைக் கைது செய்ய முயற்சிப்பதை அரசியல் பழிவாங்கல் அன்றி எவ்வாறு கருதுவது? இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரம்.. அரசாங்கத்தை கடுமையாக சாடும் விமல் வீரவன்ச | Wimal Weerawansa Criticized Anura Government

பகிரங்கமாகக் கூற முடியாத பல பழிவாங்கல்களில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் ஜனாதிபதி என்பவர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தீர்மானம் எடுப்பவராவார். எனவே, அவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதும், ஏனைய சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.

இலங்கையில் மாத்திரமின்றி எந்தவொரு நாட்டிலும் இதுவே யதார்த்தமாகும். தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அவ்வாறெனில் இனி அரசு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்துக் காட்ட வேண்டும். இதன் மூலம் எவ்வாறு பணத்தை மீதப்படுத்துகின்றனர் என்பதையும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US