ஈரானுக்கு பயங்கர தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழிக்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களும் இலக்க வைக்கப்படும் எனத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்கள்
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரப்பரப்பாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 94 டொலரை எட்டியுள்ளது.
கன்னியா புதிய கட்டுமானத்தால் தமிழர்களுக்கு வரப்போகும் புதிய சிக்கல் - தமிழரசுக் கட்சி உறுப்பினர் எச்சரிக்கை