துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி
நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும் பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி