மீண்டும் மகிந்தவின் பக்கம் செல்கிறாரா விமல்..! உயிராபத்து தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயம்
ஒருபோதும் நாம் மகிந்த ராஜபக்சவின் பக்கம் மீண்டும் செல்லமாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் பக்கம் மீண்டும் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரை சேர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே விமல் வீரவன்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இடம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. ஆகவே கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல.
உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. எது எவ்வாறாயினும், மகிந்த தலைமையிலான அணியுடன் இணையமாட்டோம், அது ஒருபோதும் நடக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




