பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத தற்போதைய அரசாங்கம்! விமர்சிக்கும் விமல்
தற்போதைய அரசாங்கத்தினாலும் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலை காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்க காட்டமாக விமர்சித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணில் பதவிக்கு வந்தவுடன் மேலெழுந்த எதிர்பார்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தவுடன் இந்த நாட்டுக்கு பல்வேறு நாடுகளும் ஓடி வந்து உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலெழுந்தது.
ஆனால் இதுவரை எந்த ஒரு நாடும் அவ்வாறு உதவ முன்வரவில்லை.
குறைந்த பட்சம் அரசாங்கம் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வழிகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் இல்லை என கூறியுள்ளார்.
இலங்கையர்கள் எதிர்கொள்ளவுள்ள மோசமான விளைவு - பிரதமர் ரணில் எச்சரிக்கை |
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாங்கம்
அத்துடன் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கத்தினாலும் தீர்க்க முடியாத நிலையே காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



