இலங்கையர்கள் எதிர்கொள்ளவுள்ள மோசமான விளைவு - பிரதமர் ரணில் எச்சரிக்கை
இலங்கையர்கள் அடுத்து மாதங்களில் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்வார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
உக்ரேன்-ரஷ்யா போரினால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும். இலங்கையர்கள் பலருக்கு இரண்டு வேளை உணவுடன் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் - ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும். அதன் தாக்கம் இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பஞ்சம்
உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக, இலங்கை இந்த ஆண்டு சிறுபோக மற்றும் பெரும்போகத்தின் போது உணவுப் பயிர்களை பயிரிட்டமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக, இலங்கையர்கள் விரைவில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
