மஹிந்தவின் உத்தரவு - அமைச்சர்களுக்கான தீவிர பாதுகாப்பில் விமல், கம்மன்பில
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கு சமமான பாதுகாப்பினை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுவாக இரண்டு பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனினும் அண்மையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.
இந்நிலைமையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தனர்.
அதற்கமைய அவர்களின் பாதுகாப்பினை குறைக்க வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்காக பாதுகாப்பினை தொடர்ந்து வழங்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்தன் காரணமாக குறித்த இருவரும் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri