புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் விமல் தரப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாமும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் தற்பொழுது நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கி வருவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் இதுவரையில் எதிர்க்கட்சியின் உறுப்பினராக செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
எதிர்க்கட்சியில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில தரப்புக்கள் இதற்கு ஆதரவினை அளிக்க இணங்கியுள்ளன.
அரசாங்கத்தினது பெருமப்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே எமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam