விமல் வீரவன்ச - உதய கம்மன்பில -திலித் ஜயவீர ஆகியோரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மீண்டும் பரிசீலனை
இதன்போது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் கோரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் இடம்பெறவுள்ளன.