13ஐ முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி: விமல் கருத்து
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றோம்.
இந்த எச்சரிக்கையை மீறி ஜனாதிபதி செயற்படக்கூடாது.
13ஆவது திருத்தச் சட்டம்
நாட்டில் தற்போது 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றது.
எனவே, அந்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்காக இந்த நாட்டைப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளியோம்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 43 நிமிடங்கள் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
