இன்று மின் துண்டிக்கப்படுமா?
மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் மின்சார சபை இன்று முன்வைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளதென ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு விரைவில் கிடைத்தால் இன்றைய தினம் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேசிய மின் தேவை கடந்த வாரம் சராசரி மட்டத்தில் இருந்த நிலையில் நேற்று இரவு 2374.1 மெகாவோட்டாக இருந்தது.
இன்றைய தினம் மின் தேவை அதிகரிக்கும் என மின்சார சபை எதிர்பார்க்கிறது.
எனினும், இன்று 2,750 மெகாவோட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.