முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: பதில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் மத்தியில் அரச ஊழியர்களும் முன்னிலையில் இருப்பதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மகஜர் கையளிப்பு
அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் சங்கம், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பதில் நிதியமைச்சரிடம் கையளிக்க நிதியமைச்சிற்கு சென்றுள்ளது.
இதன்போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகிறது.
முன்னிலையில் இருக்கும் தரப்பு
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் மத்தியில் அரச உதவி கிடைக்க வேண்டியவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அரச ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர்.
அரச ஊழியர்கள் உட்பட நிலையான மாதாந்த வருமானம் பெறும் குழுக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு குறுகிய கால தீர்வை விட நீண்ட கால தீர்விலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்த வரவு செலவுத் திட்டம் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |