கறுப்பு ஞாயிறு போராட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
எதிர்வரும் மார்ச் 7 ம் திகதி கறுப்பு ஞாயிறு போராட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எனினும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டங்களில் இணைய வாய்ப்புள்ளது.
கத்தோலிக்க திருச்சபையால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் அல்லது பிற மதத்தலைவர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் தனது கட்சி ஈடுபடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு,விசாரணைகளை உரியமுறையில் கையாளவில்லை.தாக்குதலுக்கு யார் சதி செய்தார்கள் என்பது குறித்து அறிக்கை குறிப்பிடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில்,கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நிரோஷன் பெரேரா, தாமும் ஏனைய கத்தோலிக்கர்களும் போராட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போராட்டங்களைத் தடுக்க அல்லது சீர்குலைக்க அரசாங்கம் ஏதேனும் முயற்சி செய்தால் நிலைமை தீவிரமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
