மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை: சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2023 முதல் 2027 வரையிலான நிதி இடைவெளியை நிரப்புவதற்கு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு சுமார் 17 பில்லியன் டொலர்களை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்தார்,
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
இந்த கடன் மறுசீரமைப்புக்கள், கொள்கை கடன் ரத்துக்கள், முதிர்வு நீடிப்பு மற்றும் வட்டி விகிதக் குறைப்பு போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்படலாம்.
அது, இலங்கைக்கும் அதன் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான சந்திப்பிலேயே தீர்மானிக்கப்படும்.
எனினும் இந்த பேச்சுவார்த்தையில் தமது அமைப்பு பங்கேற்கவில்லை என்று சர்வதேச
நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன்
தெரிவித்துள்ளார்.