கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி திட்டவட்டம்
கருத்து வௌிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்கும் செயற்பாடுகளை தான் ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.06.2023) ஹோமாகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டிஜிட்டல் முறையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெற்காசிய வலயத்தில் குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கிய நானே, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செயற்பட மாட்டேன். அவ்வாறான தேவை எனக்கு இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
உத்தேச இலத்திரனியல் ஔிபரப்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு சட்டமூலம் என்பது, இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக யாருக்கேனும் தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
உலகின் அனைத்து நாடுகளிலும் அவ்வாறான கட்டமைப்பொன்று உள்ளது.
ஐக்கிய ராச்சியத்தில் நடைமுறையில் இருக்கும் இலத்திரனியல் ஒழுங்குமுறை வழிகாட்டல்களை அப்படியே பின்பற்றி உத்தேச சட்டமூலத்தை உருவாக்குமாறு நான் பணிப்புரை விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
