திருமணங்களால் மாற்றம் ஏற்படுமா? காத்திருக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள்
திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 50 வரை மட்டுப்படுத்துவதால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமகாலத்தில் ஹோட்டல்களுக்கான ஒரே வருமானம் திருமணங்கள் மாத்திரமே என்பதனால் உரிமையாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் திருமண நிகழ்வு நடத்துவதனை முழுமையாக நிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலநறுவை மாவட்ட வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் சமுதிக சந்தசிரி தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுப்படுத்துவது என்பது ஏற்க முடியாது. மணமகன், மணமகள் அவர்களின் பெற்றோர், ஒப்பனை கலைஞர், வீடியோ எடுப்பவர் என பார்த்தால் மேலதிகமாக 30 பேரை மாத்திரமே அழைக்க முடியும். இது பயனுடையது அல்ல.
இன்று ரயில், பேருந்துகளில் 80 பேர் வரையில் செல்கின்றார்கள். அவர்கள் யார் என்றும் தெரியாது. எனினும் திருமணத்திற்கு வருபவர்கள் யார் என பதிவிடப்படும்.
அதேபோன்று அவர்களை எங்களால் கண்கானிக்க முடியும். இதனால் திருமண நிகழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ளவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் ரயில் பேருந்துகளில் செல்பவர்களுடன் திருமணங்களை ஒப்பிட முடியாது. பயணம் செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிய விடயமாகும். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது முக்கியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.